கோவை மேட்டுப்பாளையம் ,துடியலூர் சாலையில், சாலை மறியல்

0
1437
கோவை மேட்டுப்பாளையம் ,துடியலூர் சாலையில், சாலை மறியல்

கோவை  27 March 2019 : கோவை துடியலூர் அடுத்துள்ள பண்ணி மடைபகுதியில் காணாமல் போன ஏழு வயது சிறுமி வீட்டின் அருகே சடலமாக மீட்கப்பட்டார். சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெரியநாயக்கன்பாளையம் டிஎஸ்பி மணி தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் அருகே உள்ள இளைஞர் மேல் சந்தேகம் ஏற்பட்டதால் காவல்துறையினர் இளைஞரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் ஒரு சில இளைஞர்களும் விசாரணை வலைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர் .முதல்கட்ட விசாரணையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து கொலை மற்றும் பாஸ்கோ சட்டப் பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமியின் உறவினர்கள் கோவை மேட்டுப்பாளையம் துடியலூர் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர் .காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குற்றவாளிகளை கைது செய்வோம் என உறுதி அளித்த பிறகும் மறியலை கைவிடாமல் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர் ,இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது ,மாற்று வழியாக வாகனங்கள் திருப்பி விடப்பட்டது.-Coimbatore News

LEAVE A REPLY