ஊட்டி தாவரவியல் பூங்கா (Ooty Botanical Gardens)

0
708

ஊட்டி தாவரவியல் பூங்கா (Ooty Botanical Gardens) தமிழ்நாடு மாநிலத்தில் நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலம் என்னும் ஊட்டியில் அமைந்துள்ளது. இப்பூங்கா 1847 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இது 22 எக்டேர் பரப்பில் பல பிரிவுகளாக அமைந்துள்ளது. இதன் அருகில் தொட்டபெட்டா சிகரம் 2,623 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது. ஆனால் ஊட்டி தாவரவியல் பூங்காவின் உயரம் கடல் மட்டத்திலிருந்து 2,250 முதல் 2,500 மீட்டர்கள் வரை இருக்கும்.[2] இப்பூங்காவை தமிழ்நாடு தோட்டக்கலை வளர்ச்சி முகமையால் பராமரிக்கப்படுகிறது. இங்கு வருடத்திற்க்கு 140 செ,மீ மழை பெய்யும். இங்கு கூடிய வெப்பநிலை 28 °C ஆகவும் குறைந்த வெப்பநிலை 0 °C ஆகவும் காணப்படுகின்றது.

LEAVE A REPLY