தொட்டபெட்டா (Doddabetta) தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை

0
954

தொட்டபெட்டா (Doddabetta) தமிழ்நாடு நீலகிரி மாவட்டத்தில் உள்ள மிக உயரமான மலை ஆகும். இதன் உயரம் 2623 மீட்டர்கள் ஆகும். இது உதகமண்டலத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இது ஒரு முக்கியமான சுற்றுலாத் தலம் ஆகும். இம்மலையின் உச்சியில் இருந்து சாமுண்டி மலையைப் பார்க்க முடியும்.

தொட்டபெட்டா என்ற சொல்லின் மூலம் கன்னடம் ஆகும். கன்னடத்தில் தொட்ட என்றால் பெரிய, பெட்டா என்றால் மலை. எனவே பெரிய மலை எனப் பொருள்படும் படி இது தொட்டபெட்டா என்று அழைக்கப் படுகிறது.

வரலாறு

தொட்டபெட்டாவின் சங்க காலப் பெயர் தோட்டி மலை. கோட்டையுடன் விளங்கிய இதனைச் சங்ககாலச் சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை வென்று தனாக்கிக்கொண்டான். யானையை அடக்க உதவும் அங்குசத்துக்கு வழங்கப்பட்ட தமிழ்ப்பெயர் தோட்டி. தோட்டி போல் உயர்ந்தோங்கி நின்ற முகடு தோட்டி எனப்பட்டது. நள்ளி இந்த மலையின் அரசன். இவன் [[கடையெழு வள்ளல்கள்|கடையெழு வள்ளல்களுள் ஒருவன். இந்த நள்ளியின் தம்பி இளங்கண்டீரக்கோ ஈரமானது கண்டுகண்டாக இருக்கும் இருக்கும் இடம் இது ஆகையால் நீலகிரி அக்காலத்தில் கண்டீர மலை எனப்பட்டது.

‘நளிமலை’ என்னும் பெயரிலுள்ள ‘நளி’ என்னும் சொல் குளிர் மிகுதியைக் குளிக்கும். நளி என்னும் சொல் பெருமை , செறிவு என்னும் பொருள்களை உணர்த்தும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. தமிழ்நாட்டிலேயே பெரியமலை ஆதலாலும், குளிர்மலை ஆதலாலும் இது நளிமலை எனப் பெயர் பெற்றது எருமை இருந்தோட்டி போல் ஒருவன் என் கையைப் பிடித்துத் தன் தலைமேல் வைத்துச் சத்தியம் செய்தான் என்று ஒரு பெண் குறிப்பிடுகிறாள். தோட்டி என்பது ஒரு கருவி. தொரட்டு, அங்குசம் ஆகிய கருவிகளைக் குறிக்கும். அவள் கையைத் தொரட்டு போல் வளைத்துத் தன் தலைமேல் வைத்துச் சத்தியம் செய்தானாம்.

LEAVE A REPLY