நீலகிரி மலை தொடர்வண்டி

0
865

இந்தியாவின் பழமை வாய்ந்த மலை தொடருந்துப் பாதைகளில் நீலகிரி மலை தொடருந்துப் பாதையும் ஒன்றாகும். 1899-ல் திறக்கப்பட்ட இப்பாதை ஆரம்பத்தில் மதராஸ் இரயில்வே நிறுவனத்தால் இயக்கப்பட்டது. உலகில் ‘நீராவி இயக்கி’ பயன்படுத்தும் தொடருந்துகளில் இதுவும் ஒன்று. ஆரம்பத்தில் கோவை – மேட்டுப்பாளையம் (நீலகிரி கிளைப்பாதை) வரை இருந்த இருப்புப் பாதையானது நீலகிரி வரை படிப்படியாக நீட்டிக்கப்பட்டது. இப்பாதை வழியே புகழ் மிக்க நீலகிரி விரைவு ரயில் (Blue mountain express) இயங்குகிறது (சென்னை – மேட்டுப்பாளையம் சாதாரண இரயில், மேட்டுப்பாளையம் – உதகமண்டலம் மலை இரயில்). இப்பாதை 1995-ல் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரியக் களமாக (World Heritage Site) ஆக அறிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY