ஊட்டி ஏரி (Ooty lake)

0
765

ஊட்டி ஏரி (Ooty lake) என்பது தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், உதகமண்டலத்தில் உள்ள ஒரு ஏரி ஆகும். இது 65 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த ஏரியில் படகு இல்லம் உள்ளது. இந்த ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏரி உதகமண்டலத்தின் முதன்மை சுற்றுலாத் தலமாகும்.

வரலாறு

ஊட்டி ஏரி ஜான் சல்லிவன் என்பவரால் 1824 இல் கட்டப்பட்ட ஒரு செயற்கை ஏரி ஆகும். மலை ஓடைகள் பாய்ந்து ஊட்டி பள்ளத்தாக்கை அடையும் பாதையில் நீரைத் தேக்கி ஏரி அமைக்கப்பட்டுள்ளது. ஏரியில் கரை உடைந்து மூன்று சந்தர்ப்பங்களில் நீரின்றி போயுள்ளது. ஏரி முதலில் மீன்பிடிக்கும் நோக்கத்திற்காக அமைக்கப்பட்டது. என்றாலும் முதன்மையாக ஏரி முழுவதும் படகு பயணம் செய்ய பயன்படுத்தப்படுகிறது. இந்த ஏரியின் அசலான பரப்பளவு குறைந்து போயுள்ளது, காரணம் இந்த ஏரிக்கு உட்பட்ட பகுதியில் தற்போதைய பேருந்து நிலையம், குதிரைப் பந்தய மைதானம், ஏரி பூங்கா ஆகியவற்றை அமைத்து ஏரியின் பரப்பளவு சுருக்கப்பட்டுவிட்டது. ஏரி 1973 இல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்வசம் வந்தது

LEAVE A REPLY