Udhagamandalam 29 December 2018 : இன்று காலை 7.30 மணி அளவில் உதகை HPF STATE BANK அருகே உதகை நோக்கி வந்து கொண்டிருந்த மினிலாரி ,எதிரே வந்து கொண்டிருந்த காருக்கு வழிவிடும் போது காரும் மினி லாரி மோதியது. இதில் மினி லாரிநிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . மினி லாரியில் பயணம் செய்த தலைமை காவலருக்கு கையில் காயம் ஏற்பட்டது .காயமடைந்த அவரை உதகை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்றார் .இந்த சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மீட்பு வாகனம் வந்த பிறகு கவிழ்ந்த மினி லாரியை மீட்டு போக்குவரத்தை சீர் செய்தனர்.-Nilgiri News











