உதகை புனித jude’s ஆலயத்திலிருந்து உதகை சென்மேரிஸ் ஆலயம் வரை பாத்திமா அன்னையின் திருவுருவச் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது

0
1257
உதகை புனித jude's ஆலயத்திலிருந்து உதகை சென்மேரிஸ் ஆலயம் வரை பாத்திமா அன்னையின் திருவுருவச் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது

Udhagamandalam 13 April 2019 : 2017 ஆம் ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பாத்திமா அன்னையின் நூற்றாண்டு விழாவாக அறிவித்தார். போர்ச்சுகல் நாட்டில் இருந்து அன்னையின் திருவுருவச் சிலை  உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க ஆலயங்களுக்கு கொண்டுவரப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் 2018 ஆம் ஆண்டு புதுவருடம் அன்று உதகையில் உள்ள அருளகத்தில் மேதகு ஆயர் அமல்ராஜ் அவர்கள் தலைமையில் பாத்திமா அன்னையின் பவணி துவக்கப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க ஆலயங்களுக்கு பாத்திமா அன்னையின் திருவுருவச் சிலை கொண்டு செல்லப்பட்டது. இதன் ஒரு நிகழ்வாக இன்று உதகை புனித jude’s ஆலயத்திலிருந்து உதகை சென்மேரிஸ் ஆலயம் வரை அன்னையின் திருவுருவச் சிலை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அருட்தந்தை வின்சென்ட் ,அருட் தந்தை ஜோசப் ,பங்கு பேரவை இளைஞர்கள் , அன்பியங்கள் மற்றும் பங்கு மக்கள் இதில் கலந்து கொண்டனர் .பாத்திமா அன்னையின் திருவுருவச் சிலை ஒரு வார காலம் சென்மேரிஸ் ஆலயத்தில் வைக்கப்படும்.- Nilgiri News

LEAVE A REPLY