நீலகிரி மாவட்டத்தில் சுமார் ரூ.460 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணை கட்டுமான பணிகளை இன்று முதன்மை செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மரு.ஜெ.ராதாகிருஷ்ணன் அவர்கள் நேரில் பார்வையிட்டு, பணிகளை விரைவுபடுத்திட பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. அம்ரித் அவர்கள், உதகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணை முதல்வர் மரு. மனோகரி, மருத்துவக்கல்லூரி மருத்துவமணை துணை தலைவர் மரு.ஜெயலலிதா, பொதுப்பணித்துறை (மருத்துவப் பணிகள் ) செயற்பொறியாளர் திரு.கிருஷ்ணசாமி உட்பட பலர் உள்ளனர்.