Udhagamandalam 19 Novermber 2018 : உதகை அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சொந்தமான காந்தி மைதானத்தில் பார்வையாளர்கள் அமரும் இடத்தில் 18.11.2018 காலை சுமார் 7 மணியளவில் ஆண் பிணம் எரிந்த நிலையில் இருந்ததைக் கண்டு அருகில் இருந்தவர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை தொடங்கினர் . விசாரணைக்கு பின்பு இறந்தவர் எரித்து கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்பது தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்தனர் .அடுத்த கட்ட விசாரணையில் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான படத்தை வைத்து இறந்தவரின் அடையாளத்தை வைத்து காவல்துறையினர் தேடி வருகின்றனர் .இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது .– Nilgiri News











