யானை வழி தடத்தை க்ளியர் செய்ய உச்சநீதி மன்றம் நடவடிக்கை

0
619

Udhagamandalam 28 July 2018 : கடந்த சில வருடமாக யானைகள் காட்டில் இருந்து ஊருக்குள் புகுந்துவிடுகின்றன என்ற செய்தி தொடர் கதையாக உள்ள ஒன்று.
முக்கியமாக முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் மேட்டுப்பாளையம் குன்னூர் சாலையில் பர்லியார் பகுதியில் யானை அவ்வப்பொழுது சாலையை கடப்பது போக்குவரத்துக்கு இடஞ்சலாக இருப்பதும் சகஜமான ஒன்று .
இதற்கெல்லாம் காரணம் யானைகளின் பாதை ( ஜம்போ Corridor ). மறைக்கப்பட்டு பல கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளதால் யானைகளின் கூட்டம் தங்களின் பாதையில் சுதந்திரமாக பயணிக்க முடிவதில்லை என்பது வேதனையான விஷயம் .
நீலகிரியை பொறுத்தமட்டில் மேற்கு மலைத்தொடர்ச்சி மற்றும் கிழக்கு மலைத்தொடர்ச்சி முழுவதும் யானைகள் உலா வரும் பாதைகள் அடக்கம்.
மேற்கு மலைத்தொடர்ச்சி சைலன்ட் வேலி யில் இருந்து பயணிக்கும் யானைக்கூட்டம் கூடலூர் , முதுமலை …மாயார்…. சீகூர் வனத்தில் நடந்து சத்தி வனப்பகுதியை அடையும்.
கிழக்கு மலை தொடர்ச்சி வழியாக செல்லும் யானை கூட்டம் மேட்டுப்பாளையம் …கல்லார் ..நெல்லித்துறை வழியாக சென்று திம்பம் காட்டு வழியாக முதுமலை ..பண்டிபூர் வனத்தை அடையும் இந்த யானை கூட்டம் .
முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் சீகூர் வனத்தில் யானை பாதையில் நூற்றிஐம்பத்திற்கு மேல் ரிஸார்டுகள் , பண்ணைகள் மற்றும் சிற்றுண்டி சாலைகள் அமைக்கப்பட்டு அதை சுற்றி மின்சார கம்பி வேலிகள் அமைத்துள்ளனர்.
இந்த ரிஸார்டுகள் ஹோட்டல்கள் கட்டி சுற்றுலாக்களை கவர்ந்துள்ளவர்கள் அனைவரும் வெளி ஊரை சேர்ந்த பெரிய மனிதர்கள் என்பது குறிப்பிடத்தக்கது . இவர்கள் கோடிக்கணக்கில் சம்பாதிப்பதற்கு பாவப்பட்ட யானைகளின் சுதந்திர பாதையை அடைத்து அவைகளின் வளர்ச்சி தடைபட்டுள்ளது என்பது வருத்தமான விஷயம் .
இந்த பிரச்சனை குறித்து 2008 ஆம் வருடம் யானை ராஜேந்திரன் “580 ஏக்கர் வருவாய் நிலங்களை யானை வழி தடமாக வழங்க உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார் .
இதற்கு இடையில் இந்த வன பகுதியில் ஆக்கிரமித்துள்ள Mudumalai Hospitality Association என்ற கூட்டம் யானை வழி தடத்திற்கு தடை வேண்டும் என்று குரல் கொடுக்க …
2009 ல் உயர் நீதி மன்றம் ஒரு உயர் குழுவை அமைத்து இந்த யானை வழித்தடத்தில் உள்ள தடை குறித்து ஆராய உத்தரவிட்டது . இந்த குழுவில் Principal Chief Conservator of Forests மற்றும் வன விஞ்ஞானி அஜய் தேசாய் இணைந்து ஆராய்ந்து தங்களின் ரிப்போர்ட்டை உயர் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க . உயர் நீதி மன்றம் இந்த பகுதி 125 /2010 யானை வழித்தடம் என்ற ஆணையை பிறப்பித்தது.
யானை ராஜேந்திரனின் வழக்கில் 2011 ல் சீகூர் வன பகுதியில் உள்ள யானை வழித்தடத்தை அடைத்து கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிடங்களும் லாட்ஜுகள் மற்றும் பணணைகள் அனைத்தும் தடை செய்து அப்புறப்படுத்தப்படவேண்டும் என்று உத்தரவை பிறப்பித்தது .
இந்த வழக்கு உச்சநீதி மன்றத்திற்கு செல்ல சென்னை உயர்நீதி மன்றத்தின் யானை வழி தடத்தை ஆக்கிரமித்துள்ள அனைத்து கட்டிடங்கள் , லாட்ஜுகள் மற்றும் பணணைகள் என்று அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு யானைகள் சுதந்திரமாக தங்களின் வழித்தடத்தில் நடந்து செல்ல பிறப்பித்த உத்தரவு மேட்கொள்ளப்படவேண்டும் என்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் இந்த சீகூர் வன பகுதியில் ஆக்கிரமித்துள்ள அனைத்து கட்டிடங்கள் லாட்ஜுகள் மற்றும் பண்னைகள் கணக்கெடுத்து உச்ச நீதி மன்றத்திற்கு சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது .
இதற்கான வேலையை நீலகிரி ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா துரிதமாக செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
யானை ராஜேந்திரனை தொடர்பு கொண்டு கேட்ட போது,” கடந்த பத்து வருடமாக இந்த யானை வழித்தடத்தை சரிசெய்யவும் அங்கு உள்ள அனைத்து ஆக்ரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று நீதி போராட்டம் ஒரு நல்ல முடிவுக்கு வந்துள்ளது . சென்னை உயர் நீதி மாற்றத்திற்கும் உச்சநீதி மன்றத்திற்கும் தலை வணங்குகின்றேன் . விரைவில் சீகூர் வன பகுதியில் மற்றும் முதுமலை புலிகள் காப்பகத்தில் அமைந்துள்ள அனைத்து ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டிடங்கள் லாட்ஜுகள் என்று அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு யானைகள் தங்களின் சுதந்திர பயணத்தை அவர்களின் வழித்தடத்தில் தொடரவேண்டும் அது விரைவில் நடக்கும் மிருகம் மனிதர்களின் மோதலும் முடிவுக்கு வரும் ” என்று கூறினார்
.
இயற்கை ஆர்வலர் சிவதாஸ் கூறும்போது ,” இந்த உச்சநீதி மன்றத்தின் உத்தரவு உண்மையில் ஒரு வரப்பிரசாதம் தான் என்று சொல்ல வேண்டும் . யானை வழித்தடம் அவைகளின் இனப்பெருக்கம் மற்றும் வம்ச பெருக்கத்தை ஏற்படுத்தும் ஒரு அதிசிய பாதை . யானை பயணம் பாதை தடைபெற்றால் தாவரங்கள் வளர்ச்சி பல்லுயிர் பெருக்கம் பாதிப்பு அடைகிறது . யானை வழித்தடம் தடைபெற்றால் யானைகளின் எதிர்காலம் ஒரு கேள்விகுறியாக மாறிவிடும் .தாவர வளர்ச்சி பாதிக்கப்பட்டால் மனிதனின் வளர்ச்சிக்கும் பாதிப்பு ஏற்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று .யனையின் வழி தடம் பாதிக்கப்பட்டால் அவைகளின் ஜீன் திறன் அறிவு திறன் …இடம்பெயர்ச்சி உறவு பாதை அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளது . தங்களின் பாதை மாறிப்போகும் போது குறுக்கு வழியாக வந்து யானைகள் போக்குவரத்துக்கும் குடியிருப்பு பகுதிக்கும் இடஞ்சலாக மாறிவிடுகிறது .உச்ச நீதி மன்றத்தின் உத்தரவின் பெயரில் நீலகிரி ஆட்சியர் தக்க நடவடிக்கை எடுத்து யானைகளின் பயணத்தை சுதந்திரமாக்குவார் என்று முழுமையாக நம்புகிறோம் “.
சீகூர் வன பகுதியில் மட்டுமல்லாமல் கல்லார் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிளாக் தண்டர் , சாட்சிநாத ஜோதி பள்ளி மற்றும் மேட்டுப்பாளையத்தில் உள்ள வன கல்லுரி யானை வழித்தடத்தை அடைத்து நிற்கிறது என்பது வருத்தமான விஷயம் .
இதனால் யானை கூட்டம் ஒன்று குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் கல்லார் மற்றும் மரபாலம் வன பகுதியில் செட்டில் ஆகியுள்ளது .
யானைகள் முதுமலை வனத்தில் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் இலையுதிர் காலம் துவங்கும் அப்பொழுது யானை கூட்டம் அங்கிருந்து இடம்பெறும் அதன் பாதை சரியாக இருந்தால் தான் நடக்கும் வழித்தடத்தில் சென்று மூன்று மாதம் கழித்து மீண்டும் தான் இருப்பிடத்தை அடையும் .
ஒரு முறை கர்நாடக ஹாசன் வன பகுதியில் இரண்டு யானைகள் சண்டையில் சிக்கி அவைகளை வனத்துறை பண்டிபூர் வனத்திற்கு கூட்டி வந்து விட அதில் ஒரு யானை மீண்டும் ஹசன் சென்று விட்டது . மற்ற யானை மசினகுடி யானை வழி தடத்தில் தன் பயணத்தை துவங்கியுள்ளது பின்னர் அதன் இனத்துடன் சென்று செட்டில் ஆகியுள்ளது .
மற்ற ஒரு விஷயம் மக்ன்னா யானை இலங்கையில் வாழ்ந்த ஒரு யானை இனம் , இலங்கையும் இந்தியாவும் இணைந்து இருந்த போது இந்தியாவினுள் வந்து செட்டில் ஆனா ஒரு இனம் . அந்த யானை வழித்தடம் சுதந்திரமாக இருந்ததனால் அந்த யானை இனம் நம் வனத்தினுள் வந்த செட்டில் ஆன ஆச்சிரியம் நிகழ்ந்துள்ளது இயற்கையாக .!.
சீகூர் வன பகுதியில் மற்றும் முதுமலை வன பகுதியில் உள்ள யானை வழித்தடத்தை ஆக்கிரமித்துள்ள கட்டிடங்கள் லாட்ஜுகள் மற்றும் பண்னைகள் அகற்ற உச்சநீதி மன்றத்தின் உத்தரவு விரிவாக செயல் படுமா ? அதே போல மற்ற யானை வழித்தடங்களில் உள்ள ஆக்ரமிப்புகளும் அகற்றப்படும் என்ற கேள்வி கூறி எழுந்துள்ளது .
யானை ராஜேந்திரனின் பத்து வருட நீதி போராட்டத்தால் யானைகள் தங்களின் பாதையில் சுதந்திரமாக பயணிப்பதை யானைகள் உணர வாய்ப்பிலை இயற்கை ஆர்வலர்களும் மிருக ஆர்வலர்களும் ஆர்வமுடன் சந்தோஷ உட்சாகத்தில் முழ்கியுள்ளனர் .
-EMMY

LEAVE A REPLY