Udhagamandalam 07 August 2018 : மலைகளின் அரசியின் முதல் கத்தோலிக்க ஆலயமான செயின்ட் மேரிஸ் ஆலயத்தின் 180 வது ஆண்டு விழா பாரம்பரிய கொடியேற்றத்துடன் துவங்கியது .
முன்னதாக உதகை வட்டார முதன்மை குரு பெனடிக்ட் தலைமையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது . உடன் பங்கு தந்தை வின்சென்ட் மற்றும் உதவி பங்கு தந்தை ஜோசப் சந்தோஷ் சிறப்பித்தனர் .
மேரிஸ் ஆலய யூத் குழு திருப்பலியை சிறப்பித்தனர் . இந்த வருட திருவிழா கொடியை கொடுத்த ஹரன் குழு கொடியை காணிக்கையாக கொடுக்க . திருப்பலிக்கு பின் ஆல்ட்ரின் ராஜன் மற்றும் மனோகரன் தலைமையில் புனித சூசையப்பர் பள்ளி மாணவர்களின் பேண்ட் வைத்தியம் முழங்க அன்னையின் கொடி ஆலயத்தை சுற்றி பவனியாக எடுத்துவரப்பட்டு மந்திரித்து கொடியை உதகை வட்டார முதன்மை குரு பெனடிக்ட் ஏற்றிவைத்தார் .
180 வது ஆண்டு விழாவை முறையாக துவக்கி வைத்தார் பங்கு தந்தை வின்சென்ட் .
6 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தினமும் மாலை 5 .30 மணிக்கு ஜெபமாலை ,திருப்பலி மற்றும் மறையுரை நிகழ்த்தப்படும் .
கோவை இரட்சகர் சபை குரு பிராங்க் மற்றும் திருச்சி இரட்சகர் சபை குரு செங்கோல்ராஜ் ஆகியோர் சிறப்பு மறையுரை நிகழ்த்துகிறார்கள் .
12 ஆம் தேதி நோயாளிகளுக்கான சிறப்பு திருப்பலி மற்றும் நற்கருணை பவனி நடக்க இருக்கிறது .
15 ஆம் தேதி பங்கு ஆலய விழா நாள் மாதாவின் விண்ணேற்பு பெரு விழா மற்றும் சுதந்திர விழா சிறப்பாக கொண்டாட படுகிறது .
உதகை மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தேசிய கொடியை ஏற்றி சுதந்திர உரை நகல்த இருக்கிறார் . அதன் பின் ஆடம்பர விழா திருப்பலி நடக்க இருக்கிறது . மதியம் மூன்று மணியளவில் புனித சூசையப்பர் மலையாள ஆலயத்தின் பங்கு குரு ஷாஜி அவர்களின் தலைமையில் மலையாள திருப்பலி நடைபெறும் . மாலை தூய இருதய ஆண்டவர் பேராலய பங்கு தந்தை ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமயில் திருப்பலி பின் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றிருக்கிறது .
அனைத்து ஏற்பாடுகளையும் பங்கு தந்தை வின்சென்ட் , உதவி பங்கு தந்தை ஜோசப் சந்தோஷ் , நாதன், பங்கு பேரவை பங்கின் இளையங்கர் குழு துறவறத்தார் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர் .












