Ooty 18 September 2018 :தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் உதகமண்டலம் சார்பாக உதகையில் ஜெல் மெமோரியல் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வடகிழக்கு பருவ மழை எவ்வாறு எதிர்கொள்வது .
தீ விபத்து ,பிற விபத்துக்கள் ஏற்படாமல் எவ்வாறு பாதுகாக்க வேண்டும் ,தீயணைப்பு கருவிகளை எவ்வாறு கையாளுவது , எல்.பி.ஜி கேஸ் கசிவு மற்றும் தீ விபத்து ஏற்படும்போது விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றும் மழை, வெள்ளம், புயல் நிலச்சரிவு, நிலநடுக்கம் போன்ற சமயங்களில் எவ்வாறு விழிப்புணர்வுடன் இருந்து நம்மையும் மற்றவர்களையும் காப்பாற்றுவது என்ற செயல்விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது .
உதகை தீயணைப்பு நிலைய அலுவலர் பொறுப்பு பிரேம்நாத் மற்றும் குழுவினர்கள் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர்.- Nilgiri News












