Ooty 01 October 2018 :உதகை நொண்டி மேடு பாங்க் காலனி பகுதியில் கடந்த ஒரு வார காலமாக சிறுத்தை அப்பகுதியில் உள்ள பாறையின் மேல் தென்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதனையடுத்து அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் சிறுத்தை கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியில் வழக்கம்போல் மேய்ச்சலில் இருந்த ஆட்டை .இன்று 2 மணி அளவில் மறைந்திருந்த சிறுத்தை ஆட்டை தாக்கி வனப்பகுதிக்குள் தூக்கிச் சென்றது. இதனை அப்பகுதியில் உள்ள ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளனர்.சிறுத்தை ஆட்டை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் வேகமாக பரவியது .இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர்.-Nilgiri News











