புதுடெல்லி: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்களுக்கு ஆலோசகர் சேவக் தந்த சுதந்திரம் தான் காரணம் என அந்த அணியின் துவக்க வீரர் கே.எல். ராகுல்தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் 2008 முதல் உள்ளூர் டி-20 தொடரான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடர்ந்து நடக்கிறது. இந்த ஆண்டுக்கான 11வது ஐபிஎல் தொடர் கடந்த ஏப்ரல் 7ம் தேதி துவங்கியது.
இந்நிலையில் மும்பையில் நடந்த ஐபிஎல்., தொடரின் ஃபைனலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சமன் செய்தது.








