ஊட்டி செயின்ட் ஜோசப் பள்ளி விளையாட்டு விழா

0
591

Udhagamandalam 04 August 2018 :ஊட்டி செயின்ட் ஜோசப் பள்ளியின் 77 வது ஆண்டு விழா மிக சிறப்பாக பள்ளி மைதானத்தில் கொண்டாடப்பட்டது .
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஷண்முக பிரியா கலந்து கொண்டு சிறப்பித்தார் . ஊட்டி நகர் துணை காவல்துறை கண்காணிப்பாளர் திருமேனி மற்றும் ஊட்டி எல் .ஐ.சி மேலாளர் ஆனி வின்சென்ட் பால் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர் .
முன்னதாக அனைவரையும் வரவேற்று பேசினார் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் எல் . சி . பெலெவேந்திரம் . மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விளையாட்டு போட்டிகளை முறையாக துவக்கி வைத்தார் . ஒலிம்பிக் ஜோதியை துணை காவல் கண்காணிப்பாளர் திருமேனி ஏற்றிவைத்து சிறப்பித்தார் .
மாணவன் தனுஷ் விளையாட்டு உறுதி மொழியை கூற அனைவரும் ஏற்றுக்கொண்டனர் . ஆசிரியர் ஆல்ட்ரின் ராஜன் தலைமையில் பேண்ட் இசை இசைக்க மாணவ தலைவர் லஸீம் முன்னிலை வகிக்க கண் கவர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டனர் சிறப்பு விருந்தினர்கள் .
100 மீட்டர் , 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது . ஓபன் டு ஆல் ஓட்டப்பந்தயத்தில் மூன்று பேர் மட்டும் கலந்து கொண்டனர் . இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர் மனோகரன் ஓடி மூன்றாம் இடத்தை பிடித்தார் .
பெற்றோர் மற்றும் ஆசிரியர் சிறப்பு போட்டிகள் நடைபெற்றது . சிறுவர்களுக்கான சாக்கு ரேஸ் அனைவரையும் ஈர்த்தது .
நடனம் ,, மாஸ் ட்ரில், என் .சி .சி மற்றும் பேண்ட் சிறப்பு நிகழ்வு அருமையாக இருந்தது .சிறப்பு விருந்தினர் தன் உரையில் ,” இந்த பள்ளியின் விளையாட்டு விழாவை கண்டு மெய்சிலிர்த்து போய்யுளேன். படிப்பு படிப்பு என்று இருக்காமல் கட்டாயம் விளையாட்டில் வளர வேண்டும் அப்பொழுதுதான் மனமும் தேகமும் நன்றாக இருக்கும். நான் ஒரு விளையாட்டு வீராங்கணையாக இருந்ததால் தான் ஒரு காவல் துறை அதிகாரியாக வந்துளேன் . பெற்றோர்கள் மாணவர்களின் உள்ள உடல் ஆரோக்கியத்தை கவனிக்க வேண்டும் . சமுதாயத்தில் ஒரு நல்ல மனிதனாக வளரவேண்டும் . ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி புகட்டுவது ஒரு பக்கம் இருந்தாலும் நீதி போதனைகள் கட்டாயம் சொல்லி தரவேண்டும் ” என்று கூறினார் .
எல் .ஐ .சி மேலாளர் ஆனி வின்சென்ட் பால் தன் உரையில் ,” நான் பூனாவில் செயின்ட் .ஜோசப் கான்வென்ட் யில் படிக்கும் பொழுது ஒரு சிறந்த ஓட்ட வீராங்கனை . இந்த பள்ளிக்கு வந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டது ஒரு மலரும் நினைவுகள் . இந்த விழா சிறப்பான கண்கவரும் ஒன்றாக இருந்தது “.
விழாவினை தொகுத்து வழங்கினார்கள் உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெரால்டு ,கிறிஸ்டோபர் ராஜ்குமார் மற்றும் ஆண்ட்ருஸ் .
உடற் கல்வி இயக்குனர் அனஸ்தாஸ் ராஜேஷ் நன்றி கூறினார் . அனைத்து ஏற்பாடுகளையும் உடற் கல்வி ஆசிரியர்கள் சாம்சன் , ராஜேஷ் கண்ணா மற்றும் அனைத்து ஆசிரியர்கள் செய்திருந்தனர் .-Emmy

LEAVE A REPLY