நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற

0
524

Udhagamandalam 06 August 2018 :நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 192 கோரிக்கை மனுக்களை
மாவட்ட ஆட்சியர் திருமதி ஜெ.இன்னசென்ட்திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் பெற்றுக்கொண்டார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 192 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா,இ.ஆ.ப., அவர்களிடம் அளித்த இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு துறை ரீதியான அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.
உதகை வட்டம் அணிக்கொரையை சேர்ந்த சித்ரா என்பவருக்கு குடும்ப வறுமை காரணமாக மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.20,000/-த்திற்கான காசோலையையும், உதகை கிரீன்பீல்டு பகுதியை சேர்ந்த திரு.நவீன்குமார் என்பவருக்கு தொழில் தொடங்க மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ.20,000/-த்திற்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.
இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.முருகன், உதவி ஆணையர்(கலால்) திரு.ஜெய்குமார், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.பாஸ்கரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.மணிவேல், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY