Ooty 04 – September 2018 : மினி பேருந்துகள் இயக்குவதில் வந்த புகாரின் பேரில் உதகை ஆர்டிஓ அலுவலர்கள் பிங்கர் போஸ்ட் பகுதியில் காலை 9.30 மணி அளவில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர் இதில் தடைசெய்யப்பட்ட AIR HORN அகற்றப்பட்டன நடத்துனர்கள் சரியான சீருடை இல்லாததாலும் மினி பேருந்தில் ROAD MAP இல்லாததாலும் ஆர்டிஓ அலுவலர்கள் எச்சரித்து அனுப்பி வைத்தனர். பொதுமக்கள் கூறுகையில் தலைகுந்தா விலிருந்து பிங்கர் போஸ்ட் வரை பேருந்துகள் சராசரி வேகத்தில் வருகிறது ஆனால் பிங்கர் போஸ்ட் இருந்து பஸ் நிலையம் செல்ல 10 நிமிடங்கள் தான் ஆகும் ஆனால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது இதனால் நாங்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறோம் இதேபோல் மினி பேருந்துகள் மெதுவாக இயக்கப்படுவதால் பின்னால் வரக்கூடிய வாகனங்கள் பொறுமை இழக்கும் சூழலும் ஏற்படுகிறது சில சமயங்களில் விபத்துக்களும் ஏற்படுகிறது இதனை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்டிஓ அலுவலர் அவர்களுக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர் இந்த திடீர் ஆய்வுனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது .-Nilgiri News











