உதகை St.Mary’s Hill பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

0
1484
உதகை St.Mary's Hill பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல்

Ooty 10 September 2018 :உதகை St.Mary’s Hill பகுதியில் ஆறுக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன கிட்டத்தட்ட நாலாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் இந்த பள்ளிகளில் படித்து வருகின்றனர் . போதிய சாலை வசதிகள் இல்லாததால் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, சில சமயங்களில் விபத்துகளும் ஏற்படுகிறது. சாலை ஒரு காரணமாக இருந்தாலும் .அப்பகுதியில் உள்ளவர்கள் சாலையிலேயே வாகனத்தை நிறுத்தி விடுவதால் வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, St.Mary’s Hill இருந்து ரெக்ஸ் பள்ளி செல்லும் சாலையில், உதகை நகராட்சியால் பள்ளி மாணவர்களுக்கு நடைபாதை அமைத்து தந்தனர் .ஆனால் இந்த நடைபாதையை பள்ளி மாணவர்கள் யாருமே பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .அப்பகுதி மக்கள் வாகனங்கள் மற்றும் workshopக்கு வரும் வாகனங்கள் இந்த நடைபாதை மேல் நிறுத்திவிடுகின்றனர் . குறிப்பாக workshopக்கு வரும் வாகனங்கள் இங்குதான் வைத்து சரி செய்கின்றனர் .பெற்றோர்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த பலனும் இல்லை என்கின்றனர். காவல்துறை ஏதோ ஒரு நாள் வந்து வாகனம் எடுங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிடுகிறார், அந்த ஒரு நாள் மட்டும் எந்த வாகனங்களும் நிற்பதில்லை .மீண்டும் அடுத்த நாள் வாகனங்கள் அதே இடத்தில் நிறுத்தி விடுகின்றனர்.நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா அவர்கள் காந்தள் சாலையில் உள்ள வாகனத்தை அகற்றிய பின்பு பள்ளி செல்லும் குழந்தைகள் நிம்மதியாக பள்ளிக்கு செல்கின்றனர் .அதேபோல் இந்த சாலையில் உள்ள வாகனத்தையும் அகற்றினால் பள்ளி செல்லும் குழந்தைகள் உயிரச்சம் இல்லாமல் செல்ல முடியும் என்கின்றனர் குழந்தைகளின் பெற்றோர்கள் .பெரிய விபத்து நடக்கும் முன்பே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.– Nilgiri News

LEAVE A REPLY