வடக்கு கரோலினா 16 Sepetember 2018 : புளோரன்ஸ் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்ட வடக்கு கரோலினாவை பேரழிவு பாதித்த இடமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். இதுவரை அங்கு புயலுக்கு 11 பேர் பலியாகி உள்ளனர். புயலின் வேகம் வலுவிழந்த நிலையிலும், மேலும் பெரு வெள்ளம் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. கரோலினாவில் உள்ள மில்லியன் கணக்கான வீடுகளில் மின்சார இணைப்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வடக்கு கரோலினாவில் உள்ள எட்டு கவுண்டிகளை பேரழிவு பாதித்த இடமாக டிரம்ப் அறிவித்ததையடுத்து, சொத்து இழப்பு நிவாரணங்களுக்கான மாணியங்கள் மற்றும் குறைந்த கட்டண கடன்களுக்கான மத்திய நிதி கிடைக்க பெறுகிறது. -World News