Udhagamandalam 30 January 2019 : உதகையை பூர்வீகமாக கொண்ட மருத்துவர் சுந்தர் அவர்களுக்கு ஆஸ்திரேலியா நாட்டின் மிகப்பெரிய விருதான “ஆர்டர் ஆப் ஆஸ்திரேலியா “ ஆஸ்திரேலியா நாடு வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது. மருத்துவர் சுந்தர் 1974ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய நாட்டில் பணியை ஆரம்பித்து 45 ஆண்டுகாலம் அவரின் கடுமையான உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக இந்த விருது கருதப்படுகிறது .மருத்துவர் சுந்தர் (75) தமிழ்நாடு உதகையில் பிறந்தவர். இவர் புதுச்சேரி மற்றும் டெல்லியில் படிப்பை முடித்து டெல்லி பல்கலைக்கழகத்தில் பணியாற்றி பின் ஆஸ்திரேலிய நாட்டுக்கு சென்று அங்கு 45 ஆண்டுகாலம் மருத்துவ பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இங்கு இருக்கக்கூடிய இந்தியர்களுக்கு ஏற்படக்கூடிய நீரழிவு நோய் சிகிச்சைக்காக என் பணி தொடரும் என்றார் மருத்துவர் சுந்தர்.– Nilgiri News











