Ooty 21 September 2018 : நீலகிரி மாவட்டம் உதகையில் NCMS பார்கிங்கில் மட்டுமே அதிகமான சுற்றலா வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. நாள் ஒன்றுக்கு நூற்றுக்கணக்காக வாகனங்கள் வந்து செல்லும் இடம் NCMS பார்கிங்.ஆனால் வாகனங்கள் வசதியாக பார்க்கிங் செய்யவும், அந்த வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்த போதுமான கழிப்பறை வசதிகளும் இல்லமல் இருந்தது.மண்தரை என்பதால் மழைக்காலங்களில் மிகுந்த சேறும் சகதியுமாக மாறிவிடும். அதனால் அங்கு நிறுத்தும் வாகனங்கள் சேற்றில் சிக்கிக்கொள்வதால் வாகன ஓட்டிகள் மிகுந்து சிரமத்திற்கு ஆளாகினர். சுற்றுலா பயணிகளும் சகதியில் நடந்து சென்று தங்களது வாகனத்தில் ஏறி செல்ல வேண்டிய நிலை. தற்போது தமிழ்நாடு அரசு சட்டசபை அறிவிப்பின்படி நீலகிரி கூட்டுறவு விற்பனைச்சங்க NCMS வளாக வாகன நிறுத்துமிடத்தில் உள்ள கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு, இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டு, கழிப்பறைகள் கட்டி நவீனப்படுத்து பணிகள் நடைபெற்று வருகிறது. சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் 15.9.2018 முதல் தற்காலிகமாக சுற்றுலா வாகனங்கள் வளாகத்தினுள் அனுமதிக்கப்படுவதில்லை.– Nilgiri News












