தூய குழந்தை தெரெசா ஆலய ஆண்டு விழா

0
938
தூய குழந்தை தெரெசா ஆலய ஆண்டு விழா

Ooty 14 October 2018 ஊட்டி தூய குழந்தை தெரெசா ஆலயத்தின் எண்பத்தி நாலாவது ஆண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .கடந்த 7ஆம் தேதி செயின்ட் மேரிஸ் ஆலயத்தின் பங்கு தந்தை அருட் பணி வின்சென்ட் அவர்களால் கொடியேற்றி வைக்கப்பட்டது .தினமும் மாலை ஜெபமாலை ,நவநாள் ,திருப்பலி நடைபெற்றது .காங்கேயம் குழந்தை மாதா திருத்தல பங்கு தந்தை கிளாடிஸ் சிறப்பு திருப்பலி மற்றும் மறையுரை நிகழ்த்தினார் .இன்று 14ஆம் தேதி பங்கின் விழா சிறப்பாக நடை பெற்றது . மறைமாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமையில் விழா சிறப்பு திருப்பலி நடை பெற்றது ..அருட்பணி.அமல்ராஜ் ,அருட்பணி. இருதய லாரன்ஸ் ,பங்கு தந்தை பெனடிக்ட் மற்றும் உதவி பங்கு தந்தை ரெனோல்ட் பிரபு ஆகியோர் சிறப்பித்தனர் .அனைத்து ஏற்பாடுகளையும் பங்கு தந்தை பெனடிக்ட் ,பங்கு பேரவை உறுப்பினர்கள் இளைஞர் குழு செய்திருந்தனர் .-Nilgiri News

LEAVE A REPLY