உலக மாணவர் தினம்

0
891

Ooty 15 October 2018 : உலக மாணவர் தினம் ஊட்டி செயின்ட் ஜோசப் மேல் நிலை பள்ளியில் ஜூனியர் ரெட் கிராஸ் சார்பாக நடைபெற்றது .பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியர் அருட் பணி.எல்.சி.பெலவேந்திரம் தலைமையில் நடைபெற்றது .சிறப்பு விருந்தினராக முன்னாள் மாணவர் முனைவர்.சாமுவேல் சர்ச்சில் ,நிறுவனர் மற்றும் இயக்குநர் Ger set Go Youth Foundation Youth Fedaration for chenge . கலந்து கொண்டு உரையாற்றினார். உதகை எல்.ஐ.சி.மேலாளர் ஆனி பால் கலந்து கொண்டு இந்த வருட சிறந்த பத்து மாணவர்களுக்கு சான்றிதழும் பரிசும் வழங்கினார் .முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி..ஜெ.அப்த்துல் கலாமின் பிறந்த நாள் உலக மாணவர் தினமாக கடைபிடிக்க படுகிறது என்பதை எடுத்து கூறி பேசினார் மாவட்ட செஞ்சுலுவை சங்க மாவட்ட செயலர் மோரிஸ் சந்தா குருஸ் .உதவி தலைமை ஆசிரியர்கள் ஜெரால்டு ,கிறிஸ்டோபர் ராஜ்குமார் ,ஸ்டீபன் ஜெரோம் முன்னிலை வகித்தனர்.
இளம் செஞ்சிலுவை சங்க மாவட்ட இணைப்பாளர் சரவண சந்திரன் அப்துல் காலம் பற்றி உரையாற்றினார்.அனைத்து ஏற்பாடுகளையும் இளம் செஞ்சிலுவை சங்க ஆசிரியர் ஆல்டரின் ராஜன் ,உடற்கல்வி இயக்குநர்அனஸ்தாஸ் ராஜேஷ்  சார்லஸ் அலெக்சாண்டர் மற்றும் போஸ்கோ செய்திருந்தனர் .ஆசிரியர் செயலர் ஆரோக்கிய நாதன் மணி நன்றி கூறினார்– Nilgiri News

LEAVE A REPLY