நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்து

0
589

Ooty 15 October 2018 : நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 179 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளித்த இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார். கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு துறை ரீதியான அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.செல்வராஜ், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.முருகன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.பாஸ்கரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.மணிவேலன், உதவி ஆணையர் (கலால்) திரு.ஜெய்குமார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.- Nilgiri News

LEAVE A REPLY