Udhagamandalam 25 November 2018 :உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் போக்குவரத்து நிறைந்த பகுதியாக மாறிவிட்டது .இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பு சிக்னல் அமைக்கப்பட்டு இருந்தது இன்றுவரை இந்த சிக்னல் பயன்பாட்டுக்கு வரவில்லை .சிக்னல் இல்லாததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காவல்துறையினர் அவர்கள் பணியை சிறப்பாக செய்து போக்குவரத்து நெரிசலை தவிர்த்து வருகின்றனர். ஒரு வார காலமாக மைசூர் செல்லும் சாலையில் காவல்துறையினர் BARRICADE வைத்துள்ளனர் . BARRICADE வைத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது ,சில சமயங்களில் சிறுசிறு விபத்துகளும் ஏற்படுகிறது. பெரிய விபத்து ஏற்படும் முன்பே இந்த BARRICADE அகற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.-Nilgiri News











