மதுரை புனித மைக்கேல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ATL ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

0
1007
மதுரை புனித மைக்கேல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ATL ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம்

மதுரை 26 November 2018 : மதுரை புனித மைக்கேல் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ATL  ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் இன்று தொடங்கியது இந்தப் பயிற்சி முகாமினை அப்பள்ளி தலைமையாசிரியர் முனைவர் கே மதிவதனன் அவர்கள் துவக்கி வைத்தார். பயிற்சியாளர்கள் ஜோசப் பிரகாஷ் மற்றும் அரவிந்த் ஆகியோர் பயிற்சி வகுப்பினை வழிநடத்திச் சென்றனர். மாணவர்களை  ஆக்க சிந்தனையோடு எவ்வாறு உருவாக்க வேண்டும் ,மாணவர்களின் சிந்தனையை எவ்வாறு வளர்த்துக்கொள்ள வேண்டும் ,அதற்கு ஆசிரியர்கள் எவ்வாறு உதவ வேண்டும் என இந்த பயிற்சி வகுப்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து சுமார் 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பு நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.- Madurai News

LEAVE A REPLY