மினி பேருந்துகள் அசுரவேகம் காவல்துறையினர் அபராதம்

0
2668
மினி பேருந்துகள் அசுரவேகம் காவல்துறையினர் அபராதம்

Udhagamandalam 02 January 2019 : நீலகிரி மாவட்டத்தில் மினி பேருந்துகள் ஆமைவேகத்தில் சில சமயங்களில் அதிக வேகத்திலும் செல்கின்றனர். இதனால் விபத்துக்களும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகின்றன .உதகை பிங்கர் போஸ்ட் பகுதியில் புதிதாக அரசு அலுவலகங்கள் உள்ளன, இங்கு வரும் அதிகாரிகளின் வாகனத்தை கூட மதிக்காமல் அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை முந்தி செல்கின்றனர். இன்று உதகை பிங்கர் போஸ்ட் சந்திப்பில் அதிக வேகத்தில் வந்த அனைத்தும் மினி பேருந்துக்கும் காவல்துறை சப்-இன்ஸ்பெக்டர் திரு புஷ்பராஜ் அபராதம் விதித்தார் . இதில் மினி பேருந்து ஓட்டுநர் ஒருவர் “அபராதம் தான் போடுறாங்க இப்போ நான் வந்து விடுவேன் என சிரித்துக் கொண்டே சென்றார்”  காவல்துறை மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் இதுபோன்ற வேகமாக வரும் மினி பேருந்தை கண்டறிந்து வாகனத்தை பறிமுதல் செய்தால் மட்டுமே ,இவர்கள் தவறுகளை திருத்திக் கொள்வார்கள் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.-Nilgiri News

LEAVE A REPLY