Udhagamandalam 28 July 2018 : நீலகிரி மாவட்டம் கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மெட்டுக்கல்லில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் முன்னிலையில், அரசு கூடுதல் முதன்மை செயலாளர்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் திரு.ஓட்டம்டாய் (OTEM DAI) அவர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் நேரில் பார்வையிட்டு குறைகள், கோரிக்கைகளை கேட்டறிந்து பழங்குடியின மக்களுக்கு தேனீ வளர்ப்பு பெட்டிகளை வழங்கினார்.
கக்குச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அம்பேத்கார் நகர் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களிடம் அடிப்படை வசதிகளான சாலைவசதி, நடைபாதை வசதி, மின்சாரவசதி, குடிநீர் வசதி போன்றவை உள்ளனவா என பார்வையிட்டு ஆய்வு செய்து அங்குள்ள மக்களிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும் கடினமாலா ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோத்திமுக்கு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கோழிப்பண்ணையில் ஆய்வு செய்து கோழி வளர்ப்பு முறை மற்றும் சந்தைப்படுத்துதல் ஆகியவை குறித்து கேட்டறிந்தார்
தமிழக அரசு பழங்குடியின மக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் வாழும் பழங்குடியின மக்கள் தங்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காக தமிழக அரசு அறிவித்த கோழிப்பண்ணை வளர்ப்பு திட்டம் தமிழகத்தில் முதல்முதலாக நீலகிரி மாவட்டத்தில் தான் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மெட்டுக்கல்லில் முதற்கட்டமாக இன்று 30 பழங்குடியின பயனாளிகளுக்கு தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 160 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ).திருமதி.சுமதி, பழங்குடியினர் ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர்.சுப்ரமணியம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.மணிவேல், உதவி ஆணையர் (கலால்) திரு.ஜெய்குமார்,செயற்பொறியாளர் திரு.பசுபதி, பழங்குடியினர் சிறப்பு அலுவலர் திரு.குமாரராஜா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.












