சிறப்பு கிராம சபை கூட்டம் கடநாடு ஊராட்சி இந்திரா நகரில் நடைபெற்றது

0
697

Udhagamandalam 15 August 2018 :நீலகிரி மாவட்டம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடநாடு ஊராட்சி இந்திரா நகரில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில்
சிறப்பு கிராம சபை கூட்டம் கடநாடு ஊராட்சி இந்திரா நகரில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் சுதந்திர தின விழாவை முன்னிட்டு கடநாடு ஊராட்சி இந்திரா நகரில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது
இக் கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி தடை செய்தல், கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டம், அந்நியோதயா இயக்கம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், குடிநீர் சிக்கனமாக பயன்படுத்துதல், கொசுக்கள் மூலம் பரவும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, முழு சுகாதார தமிழகம், முன்னோடி தமிழகம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், மகளிர் திட்டம், முதலமைச்சரின் சூரிய மின் சக்தியுடன் கூடிய பசுமை வீடு திட்டம் , பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்(ஊரகம்), பிரதம மந்திரி கிரா சாலைகள் திட்டம், ஊராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப்பணிகள் முன்னேற்றம் மற்றும் நிதி செலவின விவரங்கள் குறித்து, இதர பொருட்கள், குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமை சட்டம், பொது விநியோகத் திட்டம், சத்துணவு திட்டம் ஆகியவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்திரா நகர் மக்கள் நடைபாதை அமைத்து தருமாறும், வீடுகளில் தனிநபர் கழிப்பிடம் கட்டி தருமாறும் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கோரிக்கை வைத்தனர். பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார். பின்னர் குப்பை எடுக்க வரும் தூய்மை காவலர்களிடம் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தனிதனியாக பிரித்து தருமாறும், அப்பொழது தான் ஊரை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்து கொள்ள முடியும் என்று கூறினார்.
இக் கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்(பொ) திருமதி.சுமதி, உதவி இயக்குநர் ஊராட்சிகள்(பொ) திரு.பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. ராமன், திரு. நாகராஜன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY