ஊட்டி செயின்ட் மேரிஸ் ஆலயத்தின் 180 வது ஆண்டு விழா

0
563

Udhagamandalam 15 August 2018 :ஊட்டி செயின்ட் மேரிஸ் ஆலயத்தின்
180 வது ஆண்டு விழா “நீலகிரி மாவட்டத்தின் முதல் கத்தோலிக்க ஆலயமான ஊட்டி செயின்ட் மேரிஸ் ஆலயத்தின் 180 ஆண்டு விழா மிக சிறப்பாக நடைபெற்றது .
கடந்த ஐந்தாம் தேதி கொடியேற்றத்துடன் ஆண்டு விழா துவங்கியது . அருட்பணி .பெனடிக்ட் , பிராங்க் மற்றும் செங்கோல்ராஜ் சிறப்பு மறையுரை நிகழ்த்தி நவநாள் திருப்பலி தினமும் நடைபெற்றது .
15 ஆம் தேதி காலை ஒன்பது முப்பது மணிக்கு மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தேசிய கொடியை ஏற்றிவைத்து பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் பொது தேர்வில் முதல் இரண்டு இடங்களை பிடித்த பங்கின் மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட்டது .பின்னர் பத்து குருக்கள் இணைந்து ஆடம்பர கூட்டு திருப்பலி நடைபெற்றது . ஏராளமான பகதர்கள் கலந்து கொண்டனர் .
பகல் மூன்று மணிக்கு புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை சஜி தலைமையில் மலையாள திருப்பலி நடைபெற்றது .
மாலை ஐந்து மணிக்கு தூய இருதய ஆண்டவர் ஆலய பங்கு தந்தை ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது . பின்னர் ஆடம்பர தேர் பவனி நகரின் மைய பகுதியான பஸ் நிலைய ரௌண்டான சுற்றி வந்தது தேர் பவனி .
180 வது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் இந்த ஆலயத்தில் இது வரை 31 பங்கு தந்தைகள் பணியாற்றியுள்ளனர். முதல் பங்க தந்தை பிகோட் பிகுலர் . முதல் உதவி பங்கு தந்தை ரிவேரா முதல் இதுவரை 81 உதவி பங்கு தந்தைகள் பணிபுரிந்துள்ளனர் .
இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆலயத்தில் பங்கு தந்தையாக பணிபுரிந்த அந்தோணி படிகார உதகை மறைமாவட்டத்தின் முதல் ஆயர் என்ற பெருமையை இந்த ஆலயம் பெற்றுள்ளது .
180 வது ஆண்டு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை பங்கு தந்தை வின்சென்ட் உதவி பங்கு தந்தை ஜோசப் சந்தோஷ் , பங்கு பேரவை , பங்கின் இளையங்கர் குழு மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர் .

LEAVE A REPLY