Ooty September 2018 : நீலகிரி மாவட்டம் கேத்தி பகுதியில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 1200 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர் .பேராசிரியர் உட்பட 250 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மூன்று மாதம் ஊதியம் வழங்காமல் தாமதப்படுத்தி வருவதால் நேற்று மதியம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனைத் தொடர்ந்து இன்று உணவு இடைவேளையின் போது மீண்டும் ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரிக்கு சம்பந்தம் இல்லாத 20க்கும் மேற்பட்ட நபர்கள் கல்லூரிக்கு வந்ததால் மாணவர்கள் இவர்களை அடியால் என எண்ணி பேராசிரியர்களுடன் இணைந்து மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர் . பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகம் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. வரும் 7ஆம் தேதி CSI BISHOP வரும்போது பேச்சுவார்த்தை நடத்தப்படும் என கல்லூரி நிர்வாகம் உறுதி அளித்த பிறகு போராட்டம் கைவிடப்பட்டது இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.- Nilgiri News












