Ooty 14 September 2018 : பாரத பிரதமர் திரு .மோடி அவர்கள் நாடு முழுவதும் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவாக இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று உணர்ந்து .அனைத்து தரப்பு மக்களும் இந்த ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்க முயற்ச்சி எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் .இதற்கான விழ்ப்புணர்வு நாடு முழுவதும் துவக்கப்பட்டு பெற்றோர் மத்தியில் அனைத்து பள்ளிகளிலும் இந்த விழிப்புணர்வு இந்த மாதம் முழுவதும் நடத்தப்பட வேண்டும்.நீலகிரி மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் திரு.நஸ்ரூதீன் ஆலோசனை படி மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளிலும் இந்த விழிப்புணர்வு துவங்கியது . புனித சூசையப்பர் மேல் நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் அருட்பணி எல்.சி.பெலவேந்திரம் தலைமையில் பெற்றோருக்கான ஊட்டச்சத்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது .ஊட்டச்சத்து காய்கறிவகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டு ஆசிரியை ஜாக்குலின் பெற்றோரிடம் விளக்கி பேசினார்.
ஆசிரியர் லாசர் நன்றி கூறி கூட்டம் நிறைவடைந்தது .தினமும் ஒரு விழிப்புணர்வு நடை பெரும் என்று தலைமை ஆசிரியர் கூறினார் .-Nilgiri News












