ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு மங்கல பொருட்கள்

0
714
நீலகிரி மாவட்டம் உதகை ஒய்.பீ.ஏ ஹாலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு மங்கல பொருட்கள் வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தொடங்கி வைத்தார்

Ooty 15 September 2018 :நீலகிரி மாவட்டம் உதகை ஒய்.பீ.ஏ ஹாலில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் 250 கர்ப்பிணி பெண்களுக்கு மங்கல பொருட்கள் வழங்கி சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தொடங்கி வைத்தார்.அதனை தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு மங்கல பொருட்களையும், ஏழு வகையான உணவுகளையும் வழங்கி சமுதாய வளைகாப்பு நடத்தப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.அர்ஜூணன் உதகை கோட்டாட்சியர் திரு.சுரேஷ், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.பொற்கொடி, சமூக நலத்துறை அலுவலர் திருமதி.தேவகுமாரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.கீதா, நகராட்சி பொறியாளர் திரு.ரவி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.-Nilgiri News

LEAVE A REPLY