கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்க முற்பட்டதால் பெண் காயம்.

0
668
கோத்தகிரி அருகே காட்டு யானை தாக்க முற்பட்டதால் பெண் காயம்.
கோத்தகிரி 24 September 2018 : கோத்தகிரி அருகே உள்ள செம்மநாரை அட்டாடி பகுதியை சேர்ந்த குமார் என்பவரின் மனைவி சரசு ,இவர் காலை நேரத்தில் வழக்கம் போல் வேலைக்கு செல்லும் பொழுது அங்கிருந்த காட்டு யானை தாக்கம் முற்பட்டதால் ,சற்றும் எதிர்பார்க்காத சரசு அதிர்ச்சியில் அங்கு உள்ள தேயிலை செடிக்குள் சென்றுள்ளார் .இதனை கண்ட அப்பகுதி மக்கள் கூச்சலிட்டதால் யானை காட்டுக்குள் சென்று விட்டது. உடனே அப்பகுதி மக்கள் சரசுவை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .-Nilgiri News

LEAVE A REPLY