நீலகிரி மாவட்டம் 23 September 2018 : நீலகிரி மாவட்டம் கூக்கல் பகுதியிலுள்ள ரகு என்பவர் Real Estate மற்றும் Builder தொழில் செய்து வருகிறார் இவர் கோத்தகிரி பகுதியில் ஒரு காட்டேஜ் கவனித்துக் கொண்டிருக்கிறார். அப்போது ரகு கவனித்துக்கொண்டிருந்த காட்டேஜ்க்கு வந்து இரு பத்திரிகையாளர்கள் ரகுவிடம் ரூபாய் 15,000 கொடுக்குமாறு கேட்டுள்ளார்.பணம் உங்கள் இடத்திற்கே வரும் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்துள்ளர் . இவர்களுக்கு இடையே நடந்த உரையாடலை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார்.
இதுபோன்ற பத்திரிக்கையாளர்கள் கட்டிடங்களின் கட்டுமான இடத்திற்கே சென்று ஏதோ ஒரு குற்றத்தை கண்டுபிடித்து அந்த குற்றத்தை வைத்து இதனை நாங்கள் செய்தியாக வெளியிடுவோம் என சொல்லி பணத்தை பறிக்கின்றனர்.பயத்தில் பணத்தையும் கொடுத்து விடுகின்றனர் .
தவறு செய்பவர்கள் மற்றும் சட்டத்தை மீறுபவர்கள் மூலதனமாக வைத்து இவர்கள் பத்திரிக்கை தொழிலை நடத்தி வருகின்றனர். இதுபோன்ற பத்திரிக்கையாளர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென நியாயமான பத்திரிக்கையாளர்கள் தெரிவித்தனர்.– Nilgiri News











