Ooty 27 September 2018 :உதகை நஞ்சநாடு அடுத்துள்ள கப்பத்துறை பகுதியில் இன்று மதியம் ஒரு மணி நேரத்திற்கு மேல் கனமழை பெய்தது. இதில் அப்பகுதியில் உள்ள கேரட் தோட்டத்தில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.திடீரென பலத்த சத்தத்துடன் இடி மின்னல் ஏற்பட்டது இதில் சின்னப்பொண்ணு மற்றும் வளர்மதி இருவரும் சுருண்டு விழுந்தனர்.
அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் .இதில் சின்னப்பொண்ணு(60) என்ற பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்ததாக கூறினார்கள்.சின்ன பொண்ணு இடி மின்னல் ஏற்பட்ட சத்தத்தில் அதிர்ச்சியில் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர் . வளர்மதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அப்பகுதியில் சோகம் நிலவி வருகிறது.-Nilgiri News











