தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டு இருந்தவர்கள் மீது கரடி தாக்கியது

0
1234
தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டு இருந்தவர்கள் மீது கரடி தாக்கியது

தங்காடு 11 October 2018 : நீலகிரி மாவட்டம் தங்காடு பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டு இருந்தவர்கள் மீது கரடி தாக்கியதில் லீலா (48) என்ற பெண்ணுக்கு காயம் ஏற்பட்டது. தங்காடு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். ராணி(35), தேவயானி(33), புஷ்பவல்லி(31) ஆகியோர் கரடி தாக்க முற்பட்டபோது பயத்தில் அலறி அடித்து இங்குமங்கும் ஓடியதில் இவர்களுக்கும் காயம் ஏற்பட்டது .வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தது கரடி இருப்பதை உறுதி செய்தனர் . அப்பகுதியில் தாய் கரடி குட்டியுடன் உலா வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் அச்சத்துடன் உள்ளனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .-Nilgiri News

LEAVE A REPLY