61ஆவது குன்னூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.

0
947
61ஆவது குன்னூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

Ooty 09 October 2018 : 61ஆவது குன்னூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று உதகை புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு நசுருதீன் அவர்கள் குன்னூர் கல்வி மாவட்ட கொடியினை ஏற்றி வைத்து, பள்ளி மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

குன்னூர் கல்வி மாவட்ட அலுவலர் திரு குமார் ஒலிம்பிக் தீபத்தை ஏற்றி வைத்தார். இந்த விழாவில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் திரு சாய்ராம் கலந்து கொண்டார்.

61 ஆவது விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் துவக்கி வைத்தார் .இந்த விளையாட்டுப் போட்டிகளை உதகையில் உள்ள சி.எஸ்.ஐ ஜெல் மெமோரியல் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஏற்பாடு செய்திருந்தனர் .

இந்த நிகழ்ச்சியில் சி.எஸ்.ஐ ஜெல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஷீலா அனைவரையும் வரவேற்றுப் பேசினார் இப் பள்ளியின் தாளாளர் திரு ராபர்ட் சிறப்பு விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவித்தார்.

புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் தலைமையாசிரியர் அருட்தந்தை எல் சி பிலவேந்திரன் சிறப்பு விருந்தினராக விழாவில் கலந்து கொண்டார் .

இப்பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் திரு ராஜேஷ் ,உடற்கல்வி ஆசிரியர்கள் திரு Sam, திரு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் சிறப்பாக விழாவை வழிநடத்திச் சென்றனர் .விளையாட்டுப் போட்டிகளில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.Nilgiri News

LEAVE A REPLY