Ooty 19 October 2018 :நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகள் அதிக அளவில் மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் உலா வருகின்றன. குறிப்பாக காட்டெருமைகள் அவ்வப்போது முக்கிய சாலைகளில் உலா வருகின்றன, ஆனால் யாரையும் எந்த தொந்தரவும் செய்யாமல் வனப்பகுதிக்குள் சென்று விடுகின்றனர்.

சட்டன் எஸ்டேட் பகுதியில் கடந்த 17.9.2018 தேதி 3 பள்ளி மாணவிகளை காட்டெருமை தாக்க முற்பட்டபோது அலறியடித்துக்கொண்டு மாணவிகள் இங்குமங்கும் சென்றதில் காயம் ஏற்பட்டது. இதே பகுதியில் இன்று காலை 11 மணி அளவில் சுசீலா 55 என்ற பெண் தேயிலைத் தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்தார் .இவர் மட்டும் இந்த தேயிலை தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மறைந்திருந்த காட்டு எருமை அருகே இவர் சென்றுள்ளார்.திடீரென காட்டெருமை தாக்கத் தொடங்கியது இதில் இவருக்கு தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது பின்னர் அலறியடித்துக்கொண்டு தேயிலைத் தோட்டத்தில் விழுந்ததில் தாடை பகுதியில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் எஸ்டேட் மருத்துவமனைக்கு அனுப்பி முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது .பின்னர் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து சிகிச்சை பெற்று வருகிறார்.இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்-Nilgiri News











