
Ooty 30 October 2018 : நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று சுற்றுலாத்துறையின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்ப்பது குறித்த மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் பள்ளி மாணவ, மாணவியர்களுடன் உறுதிமொழி எடுக்கப்பட்டது.அதனை தொடர்ந்து நாம் இருக்கும் இடங்களை தூய்மையாக வைப்பது, கழிவறைகளை பயன்படுத்துவது போன்றவை குறித்து பள்ளி மாணவ, மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மாணவ, மாணவியர்கள் அந்தந்த ஆசிரியர்களிடம் இந்த ஒருநாள் சுற்றுலா குறித்து கட்டுரை சமர்பிக்க வேண்டும். அதில் சிறந்த கட்டுரைகளுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்குவார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.தெ.சண்முக ப்ரியா, தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டு கழக மண்டல மேலாளர் திரு.முரளி, சுற்றுலா அலுவலர் திரு.ராஜன், உதவி சுற்றுலா அலுவலர் திருமதி.துர்கா, ஆசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.-Nilgiri News











