நெடுகல் கொம்பை பழங்குடியினர் கிராமத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது

0
626
நெடுகல் கொம்பை பழங்குடியினர் கிராமத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது

Udhagamandalam 03 December 2018 : குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட நெடுகல் கொம்பை பழங்குடியினர் கிராமத்தில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட வன அலுவலர் உத்தரவின்பேரில் ,குந்தா வனசரக அலுவலர் திரு சரவணன் அவர்கள் தலைமையில், பிளாக் மெடிக்கல் ஆபீசர் அவர்கள் முன்னிலையில் மருத்துவ குழுவினர் அப்பகுதியில் உள்ள ஆதிவாசி மக்கள் மற்றும் அருகில் இருந்த தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்தியன் வங்கி மேலாளர் மருத்துவ காப்பீடு குறித்து விரிவான விளக்கம் அளித்தார். வனத்துறையினர் சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது .வன ஊழியர்களும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.-Nilgiri News

LEAVE A REPLY