Udhagamandalam 19 December 2018 : 17-12-2018 மாலை சுமார் 3:20 மணியளவில் உதகை தெற்கு சரகம், ரீஸ்கார்னர் பிரிவு, நுந்தளா காவல் பகுதிக்குட்பட்ட CSI GELL MEMORIAL GIRLS HR SEC SCHOOL வளாகத்தில் கற்பூர கிளைகளை ஒதுக்கிய வேலை செய்துக்கொண்டிருந்த கேசவன் (70) கரஞ்சங்தோடு செம்மன்காடு Post (kerala) என்பவரை காட்டு மாடு தாக்கியது .இதில் இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வனசரக பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்றனர். பிணத்தை கைப்பற்றி உதகை அரசு தலைமை மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக எடுத்துச்செல்லப்பட்டது . இந்த சம்பவம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.– Nilgiri News











