Udhagamandalam 08 December 2018 :நீலகிரி மாவட்டம் குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்ச கம்பை கிராமம் அருகே கேரட Lease , தூதுர் மட்டம், பரளிக்காடு ஆகிய பகுதிகளில் பயிரிட்டுள்ள மேரக்காய் தோட்டத்திலுள்ள மேரக்காய் உண்பதற்காக 5 யானைகள் கொண்ட கூட்டம் தொடர்ந்து இந்த தோட்டத்தில் உள்ள செடிகளை சேதப்படுத்தி வந்தன. 
குந்தா வனசரக அலுவலர் திரு சரவணன் அவர்கள் தலைமையில் வனத்துறை களப் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் இரவும் பகலும் போராடி யானையை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் விரட்டினர்.
நீலகிரி கோட்ட உதவி வன அலுவலர் திரு சரவணன் அவர்கள் மற்றும் களப்பணியாளர்கள். Palaniappa எஸ்டேட் வழியாக அடர்ந்த வனப்பகுதிக்குள் யானைகளை விரட்டினர் ஐந்து எண்ணிக்கை கொண்ட யானைகளில் ஒன்று ஆண் யானை நான்கு பெண் யானைகள் தொடர்ந்து இரண்டு வருடங்களாக ஒன்றாகவே சுற்றி திரிந்துள்ளன. முள்ளி ,கெத்தை ,தாய் சோலை, குந்தா , கரியமலை ஆகிய பகுதிகளில் தொடர்ந்து உலா வந்து கொண்டிருந்தன .
வனத்துறையினர் யானைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் யானைகளின் வழித்தடத்தின் வழியாகவே யானைகளை அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் விரட்டினர்.
இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.-Nilgiri News












