அந்தரத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் மரக்கிளை

0
1016
அந்தரத்தில் உயிர்பலி வாங்க காத்திருக்கும் மரக்கிளை

Udhagamandalam 27 December 2018 : உதகை தமிழகம் பிங்கர் போஸ்ட் செல்லும் சாலையில் அபாயகரமான மரங்கள் வெட்டப்பட்டது. இந்தப் பணிகள் அரைகுறையாக செய்யப்பட்டதால், வெட்டப்பட்ட மரங்கள் சாலையில் இன்னும் அகற்றப்படாமல் உள்ளது. ஏற்கனவே இந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன. அகற்றப்படாத மரங்களினால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.  மரம் வெட்டும் பணி செய்பவர்களின் கவனக்குறைவால் வெட்டப்பட்ட மரக்கிளைகள் மரத்தில் தொங்க விட்டுள்ளனர். இந்த மரக்கிளைகள் எப்போது வேண்டுமென்றாலும் சாலையில் விழும் ஆபத்தும் உள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் இதனை உடனே கண்டறிந்து அகற்றினால் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்படும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.-Nilgiri News

LEAVE A REPLY