Nilgiri News : 26/12/2019 : நீலகிரி மாவட்டம் உதகையில் கங்கண கிரகணம் தெளிவாக தெரிந்தது இதனை காண தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் உதகை மத்திய வானியல் ஆய்வு மையம், உதகை அரசு கலைக் கல்லூரி இடங்களில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன வானிலையில் நடக்கும் இந்த அரிய நிகழ்வை காண பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து இதனை கண்டு ரசித்தனர் .உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்களாக மேகமூட்டமாக காணப்பட்டது இன்று அதிகாலை முதலே வானம் தெளிவாக இருந்தல். இந்த கங்கண கிரகணத்தை தெளிவாக காண முடிந்தது. சரியாக காலை ஒன்பது இருபத்தி ஏழு மணி அளவில் இந்த கிரகணம் தொடங்கிது . தொடங்கிய சிறிது நேரத்தில் உதகையில் காலை 6 மணி அளவில் இருந்தது போல காணப்பட்டது.
Photo:-Charles photography gcs digital studio ooty