Udhagamandalam July 27 -2018 நீலகிரி மாவட்டம் உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் திரு.ஐ.எஸ்.இன்பதுரை அவர்கள் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் உதகை தமிழகம் அரசினர் விருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் முன்னிலையில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு தலைவர் திரு.ஐ.எஸ்.இன்பதுரை அவர்கள் தலைமையேற்று கூறியதாவது,
ஜனநாயகத்தின் ஒரு அங்கமாக சட்டமன்றம் திகழ்கிறது. சட்டமன்ற பேரவை மாண்புமிகு சட்டமன்றப் பேரவை தலைவர் அவர்கள் தலைமையில் இயங்கி வருகிறது. சட்டமன்ற உறுதிமொழிக்குழு முக்கியமான குழுவாகும். கடந்த சட்ட மன்ற கூட்டத்தொடர் நடைபெறும் பொழுது பல்வேறு அரசு துறைகளின் மூலம் நமது மாவட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட 69 கேள்விகள் விவாதிக்கப்பட்டது. அதில் 31 உறுதிமொழிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்குழுக்கள் அதிகாரமிக்க குழுக்களில் ஒன்று. இக்குழு தமிழ்நாடு முழுவதும் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறது. சட்டமன்றத்தில் மாண்புமிகு அமைச்சர் பெருமக்களால் அறிவிக்கப்படும் உறுதிமொழிகள் சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மூலம் ஆய்வு மேற்கொண்டு அவைகள் அறிக்கையாக கொடுக்கப்பட்டு சட்டப்பேரவைக்கு அளிக்கப்படும்.
இந்த ஆய்வு கூட்டத்தில் அனைத்து துறைகளின் செயல்பாடுகளும், திட்டங்களும் எந்த நிலையில் உள்ளது. நிலுவையில் உள்ள திட்டங்கள், மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் புதிய கட்டிடங்கள், வளர்ச்சிப்பணிகள் ஆகியவை குறித்து கேட்டறிந்து நிலுவையிலுள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறும், அரசு அறிவிக்கும் மக்களுக்கான அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் .எந்தவித தொய்வுமின்றி அலுவலர்கள் விரைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் குழுவின் செயலாளர் திரு.கி.சீனிவாசன், இணைச்செயலாளர் திரு.பா.சுப்ரமணியம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.தெ.சண்முக பிரியா, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதிமொழிக்குழு உறுப்பினர்கள் திரு.அ.சாந்திராமு, திரு.அ.மனோகரன், திரு.ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ப.செல்வராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்











