Ooty 17 August 2018 :உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே ராட்சத மரம் விழுந்து 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு. உதகை நகரம் முழுவதும் மின் துண்டிக்கப்பட்டுள்ளது.
இருள், பலத்த காற்று மற்றும் கடும் குளிரில் மரத்தை அகற்றும் பணியில் தீயணைப்பு துறையினர், மின்துறையினர், காவல் துறையினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.
பேருந்து மீது நின்று மரத்தை அகற்றும் போது ஸ்ரீதர் என்ற தீயணைப்பு வீரர் நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தார், உடனடியாக மின்துறை வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.