வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,55,000/- மதிப்பில் நிவாரண பொருட்கள்

0
558

Ooty 17 August 2018 : நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில் வயநாடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,55,000/- மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட கூடுதல் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் தலைமையில் வயநாடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.4,55,000/- மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைத்து கூறியதாவது,
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மாவட்ட மக்களுக்கு உதவிடும் பொருட்டு வயநாடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் மூலமாக நீலகிரி மாவட்ட சமூக நலத்துறை சார்பில் ரூ.55.000/- மதிப்பில் புடவைகள், சேனிட்டரி நாப்கின்ஸ், குழந்தைகளுக்கான ஆடைகள், சோப்பு, சேம்பு, மற்றும் ஆண்களுக்கான பேண்டுகள், டிசர்ட்டுகள் ஆகியவைகளும், உதகை நகராட்சி சார்பில் ரூ.1,00,000/- மதிப்பில் பிஸ்கட், சோப்பு, அரிசி போன்ற பொருட்களும், தோட்டக்கலைத்துறை சார்பில் கடநாடு, உல்லத்தி, இத்தலார், மீக்கேரி, சோலாடா, கேத்தி, கூக்கல்தொரை ஆகிய பகுதிகளில் உள்ள கூட்டுப்பண்ணை மற்றும் உழவர் உற்பத்தி நல குழு சார்பில் 3 டன் காய்கறிகள் மற்றும் 800 கிலோ அரிசி, பருப்பு, சர்க்கரை, சோப்பு, பிஸ்கட் போன்ற பொருட்கள் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் சார்பில் ரூ.25,000/- நிதியுதவியும் மொத்தம் தோட்டக்கலைத்துறை மூலம் ரூ.3.00 இலட்சம் மதிப்பிலும் ஆக மொத்தம் ரூ.4,55,000/- மதிப்பில் மாவட்ட நிர்வாகம் சார்பில் நிவாரண பொருட்கள் லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வயநாடு மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படுகிறது எனவும், மாவட்டத்திலிருந்து மூன்று, மருத்துவ குழுக்கள் தேவையான மருந்துகளுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் வயநாடு மாவட்ட ஆட்சியர் அவர்கள் 10 டன் அரிசி வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார் அதற்குண்டான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் திரு.சிவசுப்ரமணியசாம்ராஜ், சமூக நலத்துறை அலுவலர் திருமதி.தேவகுமாரி, உதகை நகராட்சி ஆணையாளர்(பொ) திரு.ரவி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்- Ooty News

LEAVE A REPLY