
கோத்தகிரி 17 January 2019: மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இதில் 19 பேருக்கு காயம் ஏற்பட்டது.
21 பேர் சுற்றுலா வேனில் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். உதகையில் உள்ள சுற்றுலா தளங்களை பார்வையிட்டு, சொந்த ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இவர்கள் உதகை கோத்தகிரி சாலை வழியாக சென்று கொண்டிருந்த பொழுது கடைசி கொண்டை ஊசி வளைவில் எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 19 பேருக்கு காயம் ஏற்பட்டது காயமடைந்தவர்களை மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேல்சிகிச்சைக்காக 8 பேரை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .இந்த விபத்தால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேட்டுப்பாளையம் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- Nilgiri News










