குந்தா 05 November 2018 : குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சக் கொம்பை பகுதியில் காட்டுப்பன்றியை ராஜேஷ் குமார் என்பவர் சுருக்கி வைத்துக் கொன்று பன்றி இறைச்சியை விற்பனை செய்வதற்காக இருந்துள்ளார் .தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர் .வனத்துறையினரை கண்டவுடன் ராஜேஷ்குமார் ஓட்டம் பிடித்துள்ளார். வனத்துறையினர், ராஜேஷ்குமாரை துரத்தி பிடித்து விசாரித்தனர் ,விசாரணையில் பன்றி இறைச்சி விற்பனை வைத்தது தெரியவந்து. தந்திரமாக ராஜேஷ்குமாரை வைத்து பன்றி இறைச்சியை வாங்க வந்தவர்களை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர் . தூதர் மட்டம் பகுதியைச் சேர்ந்த 4 பேர் கருப்புசாமி (38),சதீஷ்குமார் (31)மீனாட்சிசுந்தரம் (30),ரமேஷ்(32) ஆகியோர் வந்துள்ளனர் .ராஜேஷ் குமாரை வைத்து பன்றி இறைச்சியை கொடுத்துள்ளனர். நான்கு பேரும் பன்றி இறைச்சியை பெற்றுக்கொண்டு காரில் சென்றுள்ளனர் .வனத்துறையினர் காரை மடக்கி பிடித்து 15 கிலோ பன்றி இறைச்சி மற்றும் காரை பறிமுதல் செய்தனர். வனத்துறையினர் ஐந்து பேரையும் கூடலூர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பின் நீதிபதி உத்தரவின் பேரில் 5 பேரையும் உதகை சப் ஜெயிலில் அடைத்துள்ளனர்.– Nilgiri News











